கவின் கன்னத்தை பழுக்க வைத்த பளார் அறை! அதிர்ச்சியில் லாஸ்லியா

பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவரான கவினின் காதல் நாடகம் ஒரு வழியாக முடிவுக்கு வந்து இனிமேல் காதல் என்ற பேச்சே கிடையாது, முழு கவனத்தையும் கேமில் செலுத்தப் போவதாக நேற்று கவின் கூறியுள்ளார்

லாஸ்லியா தந்தையின் வருகைக்குப்பின் பெரும் மாற்றம் அடைந்த கவின், நேற்று மீண்டும் இயல்பாக தன்னுடைய பழைய நிலைக்கு வந்துவிட்டதாகவே கருதப்படுகிறது. இந்த நிலையில் கவினை பார்க்க அவருடைய நண்பரும் நடிகருமான பிரதீப் பிக்பாஸ் வீட்டிற்கு வருகிறார்

பிக்பாஸ் வீட்டிற்கு வந்தவுடன் எந்தவிதமான அறிவுரையையும் கூறாமல் கவின் செய்த தவறாக விளையாடியதற்காக கன்னத்தில் ஓங்கி அடிக்கிறார். இதனால் கவின் கன்னம் பழுத்தது. இந்த அறையை நீ ஒருவேளை டைட்டில் ஜெயித்து வந்தால் மேடையில் அடுத்து திருப்பிக் கொடுத்துகொள் என்று அவர் கூறியிருந்தார்

கவின் நண்பரின் இந்த செயலால் பிக்பாஸ் வீட்டில் உள்ளவர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். குறிப்பாக வனிதா, சேரன், லாஸ்லியா ஆகியோர் அதிர்ச்சியில் உறைந்தனர். தன் தவறை உணர்ந்து திருந்தி மீண்டும் இயல்பு நிலைக்கு வந்திருக்கும் நிலையில் கவினுக்கு இந்த தண்டனை அளிப்பது சரியா? என்பதே பலரது கேள்வியாக உள்ளது

Leave a Reply