shadow

‘கழுகு 2’ படத்தின் சென்சார் குறித்த தகவல் !

கடந்த 2012 ஆம் ஆண்டு சத்தியசிவா இயக்கத்தில் யுவன் ஷங்கர் ராஜா இசையில் கிருஷ்ணா, பிந்துமாதவி ஆகியோரின் நடிப்பில் வெளியான ‘ கழுகு’ படம் வெற்றி பெற்ற நிலையில் தற்போது ‘கழுகு 2’ படத்தின் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது.

இந்த படத்தின் போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் முடிவடைந்தது. மேலும் இந்த படத்திற்கு சென்சார் அதிகாரிகள் ‘யூ’ சான்றிதழை கொடுத்துள்ளனர் . மேலும் இந்த படத்தின் ஃபர்ஸ்ட்சிங்கிள் பாடலான ‘சகலகலாவல்லி’ என்ற பாடல் நாளை வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தின் முதல் பாகத்தை இயக்கிய சத்தியசிவாவே இந்த படத்தையும் இயக்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் கிருஷ்ணா, பிந்துமாதவி, காளி வெங்கட், யாஷிகா ஆகியோர் நடித்துள்ளனர்.

Leave a Reply