shadow

கல்லூரி விழாவில் பாட்டு பாடி அசத்திய தமிழக அமைச்சர்

சென்னை கல்லூரி ஒன்றில் நேற்று பட்டமளிப்பு விழா நடந்தபோது அதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட தமிழக மீன்வளத்துறை அமைச்சர் எம்ஜிஆர் படத்தின் பாடலை பாடி மாணவர்களை அசத்தினார்

விவசாயி படத்தில் இடம்பெற்ற சூப்பர் ஹிட் பாடலான

என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில்
ஏன் கையை ஏந்த வேண்டும் வெளிநாட்டில்
ஒழுங்காய் பாடுபடு வயற்காட்டில்
உயரும் உன் மதிப்பு அயல்நாட்டில்

என்ற பாடலை அவர் பாடியபோது மாணவர்கள் உற்சாகத்தில் கைதட்டினர்.

இந்த பாடலை பாடிய பின்னர் நம் நாட்டில் விவசாயம் செழிக்க பல நவீன அறிவியல் முறைகள் கையாளப்பட்டு வருகின்றன. இதை நாம் தொடர்ந்தாலே நம்முடைய புகழ் வெளிநாட்டில் பரவும்’ என்று கூறினார்.

Leave a Reply