கல்லூரி மாணவி ஒருவர் தனது கல்விச் செலவுக்காக ஒரு லட்ச ரூபாய் வேண்டும் என்ற கேட்ட ஒரு சில மணி நேரத்தில் அவரது வங்கி கணக்கில் நடிகை காஜல் அகர்வால் ரூபாய் ஒரு லட்சத்தை செலுத்தியுள்ளார்

ஹைதராபாத்தைச் சேர்ந்த சுமா என்ற கல்லூரி மாணவி சமீபத்தில் காஜல் அகர்வாலின் டுவிட்டரில் தனக்கு கல்லூரி கட்டணம் கட்ட 83 ஆயிரம் வேண்டும் என்று கேட்டுள்ளார்

இதனையடுத்து உடனடியாக அவரது வங்கி கணக்கை பெற்ற காஜல், ஒரு சில மணி நேரத்தில் அவருக்கு ஒரு லட்ச ரூபாய் வழங்கி உள்ளார் இதனை அடுத்து காஜல் அகர்வாலுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

தற்போது ஆச்சார்யா, இந்தியன்2 உள்பட 5 படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply