கல்லூரி திறந்த முதல் நாளிலேயே போராட்டம்: என்ன ஆகும் கல்வி?

குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடத்தியதால் தமிழகத்தில் உள்ள கல்லூரிகள் விடுமுறை விடப்பட்டு இன்றுதான் திறக்கப்பட்டுள்ளன. ஆனால் இன்று கல்லூரி திறந்த முதல்நாளிலேயே டெல்லி ஜே.என்.யூ மாணவர்கள் மீதான தாக்குதலை கண்டித்து ஒரு சில கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டம் நடத்தி வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது இதனால் மாணவர்களின் படிப்பு கேள்விக்குறியாகி விடும் என சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்

அரசியல்வாதிகள் ஒரு பிரச்சினைக்காக இன்று போராடுவார்கள் பின்னர் திடீரென அதே பிரச்சனையை நாளை ஆதரிப்பார்கள். அரசியல்வாதிகளை நம்பி போராட்டத்தில் மாணவர்கள் இறங்க வேண்டாம் என்று சமூக ஆர்வலர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்

சூர்யாவின் அகரம் அறக்கட்டளையில் உதவியால் படித்த ஒரு மாணவி நேற்று நெகிழ்ச்சி பொங்க, தான் ஒரு நல்ல நிலைக்கு வந்துள்ளது காரணம் கல்வி தான் என கூறியுள்ளார். அந்த கல்வியை மாணவர்கள் கற்று நல்ல நிலைக்கு வரவேண்டும் என்று பெற்றோர்கள் கஷ்டப்பட்டு கல்லூரிக்கு அனுப்பி வைத்துள்ள நிலையில் மாணவர்கள் போராட்டம் என்ற பெயரில் தங்கள் வாழ்க்கையை வீணாக்கி விடக்கூடாது என்பதே சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது

Leave a Reply