கல்கி ஆசிரமத்தில் ரூ.500 கோடி வருமானம்: வருமான வரித்துறை கண்டுபிடிப்பு

கல்கி ஆசிரமத்தில் கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்ற வருமான வரி சோதனையில் கணக்கில் காட்டப்படாத ரூ.500 கோடி வருமானம் கண்டுபிடிக்கப்பட்டதாக வருமான வரித்துறை தகவல் அளித்துள்ளது.

மேலும் கல்கி ஆசிரமத்தில் ரூ.43.9 கோடி இந்தியப் பணம் ம்ற்றும் ரூ.18 கோடி மதிப்புள்ள அமெரிக்க டாலர்கள் பறிமுதல்
செய்யப்பட்டதாகவும் வருமான வரித்துறை அதிகாரிகளிடம் இருந்து தெரிய வந்துள்ளது

கல்கி பகவான் மகனுக்கு சொந்தமான 40 இடங்களில் வருமான வரி சோதனை நடைபெற்றது என்பது தெரிந்ததே. இந்த சோதனையில் மொத்தம் கணக்கில் காட்டப்படாத ரூ.500 கோடி மதிப்பிலான சொத்துக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

ஒரு ஆன்மீக சேவை செய்யும் ஆசிரமத்தில் ரூ.500 கோடி வருமானம் வருகிறது என்றால் அது ஆசிரமா? அல்லது அநியாயத்தின் இருப்பிடமா? என்ற கேள்வியை நெட்டிசன்கள் எழுப்பி வருகின்றனர்.

Leave a Reply