கருப்பு ராஜா வெள்ளை ராஜா: விஷால், கார்த்தியுடன் இணைந்த ஆர்யா
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் கட்டிடத்திற்காக விஷால் மற்றும் கார்த்தி இணைந்து ஒரு படத்தில் நடிக்கவுள்ளதாகவும், அந்த படத்தில் இருவருக்கும் கிடைக்கும் சம்பளத்தை கட்டிடத்தின் நிதியாக தரவுள்ளதாகவும் ஏற்கனவே இருவர் தரப்பில் இருந்தும் அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி இருவரும் இணைந்து நடிக்கும் ‘கருப்பு ராஜா வெள்ளை ராஜா’ படத்திற்காக பெற்ற ரூ.5 கோடியை இருவருமே கட்டிட நிதிக்காக அளித்துள்ளனர்.
இந்நிலையில் இந்த படத்தில் தற்போது ஆர்யாவும் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். அதுமட்டுமின்றி அவரும் இந்த படத்திற்காக தனக்கு வழங்கப்படும் சம்பளத்தை கட்டிட நிதியாக தர முடிவு செய்துள்ளார்.
பிரபுதேவா இயக்கவுள்ள இந்த படத்தில் ‘வனமகன்’ நாயகி சாயிஷா ஷெகல் நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். மூன்று முன்னணி நடிகர்கள் இணைந்து நடிக்கும் இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Leave a Reply
You must be logged in to post a comment.