shadow

கருணாநிதி நினைவேந்தல்: அமித்ஷா வருகையில் திடீர் மாற்றம்?

திமுக தலைவர் கலைஞர் கருணாநிதியின் நினைவேந்தல் நிகழ்ச்சியில் பங்கேற்க போவதில்லை என பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் அமித்ஷா தன்னிடம் தெரிவித்ததாக அக்கட்சியின் மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

கருணாநிதி நினைவேந்தலில் அமித்ஷா கலந்து கொள்ளவில்லை என்ற செய்தி குறித்து அறிந்து தாம் மகிழ்ச்சி அடைவதாகவும் சுப்பிரமணியன் சுவாமி கூறியிருக்கிறார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சியில் அமித்ஷா கலந்து கொள்ள போகிறார் என்ற செய்தி வெளியானதில் இருந்து திமுக-பாஜக கூட்டணி சாத்தியம் என்ற செய்தியும் வெளியானதால் இந்த வருகையில் மாற்றம் ஏற்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது

Leave a Reply