shadow

கருணாநிதியுடன் பிரதமர் மோடி இன்று சந்திப்பு

பாரத பிரதமர் நரேந்திரமோடி இன்று சென்னை வருகிறார். தினத்தந்தி பவளவிழா மற்றும் ஒரு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் பிரதமர் மோடி. இன்று மதியம் திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்து உடல்நலம் விசாரிக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

கடந்த சில மாதங்களாக திமுக மற்றும் தமிழக பாஜக தலைவர்கள் கடும் கருத்து மோதலில் உள்ள நிலையில் இன்றைய மோடி-கருணாநிதி சந்திப்பு அனைவரையும் ஆச்சரியத்தை அளித்துள்ளது.

ஆனாலும் இன்று பகல் 12.30 மணிக்கு அவர் கருணாநிதியின் இல்லம் செல்லும் பிரதமர் மோடி அவரது உடல்நலம் குறித்து மட்டுமே விசாரிக்கவுள்ளதாகவும் அரசியல் குறித்து பேசும் வாய்ப்பு இல்லை என்றும் கூறப்படுகிறது.

Leave a Reply