கமல், ரஜினியை மறைமுகமாக தாக்கிய தமிழிசை

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் விரைவில் புதிய கட்சி ஆரம்பித்தவுடன் பாஜகவுடன் கூட்டணி வைப்பார் என்றும், அல்லது அதிமுகவின் தலைமையை ஏற்று பாஜகவுடன் கூட்டணி வைப்பார் என்றும் வதந்திகள் பரவி வருகிறது. இருப்பினும் ரஜினியை பாஜகவினர் தாக்கி பேசுவது அரிதிலும் அரிதாகவே இருந்து வருகிறது.

இந்த நிலையில் பாஜக தமிழக தலைவர் தமிழிசை செளந்திரராஜன் சற்றுமுன் கமல், ரஜினி இருவரையும் மறைமுகமாக தாக்கி பேட்டி அளித்துள்ளார். திமுக தலைவர் கருணாநிதியும், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாயும் இல்லாத வெற்றிடத்தை நிரப்ப நடிகர்கள் பலர் முயற்சிக்கின்றனர். ஆனால் திடீரென வரும் நடிகர்களால் அவர்களது இடத்தை நிரப்ப முடியாது

கருணாநிதி, ஜெயலலிதா இருவருமே போராடித்தான் உயர்ந்த இடத்திற்கு வந்தனர். போராடாமல் எடுத்தவுடனே வெற்றிடத்தை யாராலும் நிரப்ப முடியாது.

Leave a Reply