கமல் படத்தில் பாட்டு பாடிய விக்ரம்…

கமல்ஹாசன் தயாரிப்பில் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் படம் கடாரம் கொண்டான் படத்தின் படப்பிடிப்பு முடிந்து விரைவில் இப்படம் வெளியாகவுள்லது

இந்த நிலையில் இப்படத்திற்காக விவேகா வரிகளில் ஜிப்ரான் இசையில் உருவாகும் பாடலை நடிகர் விக்ரம் பாடியுள்ளார். இந்த பாடல் இன்று ஒலிப்பதிவு செய்யப்பட்டதாக போட்டோவுடன் கூடிய செய்தி ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது

கமல்ஹாசன் தயாரிக்கும் இந்த படத்தில் விக்ரம், அக்சராஹாசன், அபி ஹாசன், ‘8 தோட்டாக்கள்’ பட நாயகி மீராமிதுன் உள்பட பலர் நடித்துள்ளனர். ராஜேஷ் எம்.செல்வா இயக்கியுள்ள இந்த படத்தின் டீசர் கடந்த பொங்கல் தினத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply