shadow

கமல் கட்சியில் போட்டியிட 732 விருப்ப மனுக்கள்

அதிமுக, திமுக கூட்டணிகள் கிட்டத்தட்ட முடிந்துவிட்ட நிலையில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியில் போட்டியிட சமீபத்தில் விருப்பமனுக்கள் பெறப்பட்டது

கட்சியில் இல்லாதவர்களும் விருப்பமனுக்கள் தரலாம் என்றும், விருப்பமனுவில் ஜாதி, மதம் குறிப்பிட தேவையில்லை என்றும் வித்தியாசமான முறையில் கமலின் அறிவிப்பு இருந்தாலும் இதுவரை மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிட 732 விருப்ப மனுக்கள் மட்டுமே பெறப்பட்டன;

சென்னையில் மக்கள் நீதி மய்யம் அலுவலகத்தில் விருப்ப மனுக்களை கமல்ஹாசன் பெற்றுக்கொண்டார். மீண்டும் இன்து காலை 11 மணி முதல் விருப்ப மனுக்கள் பெறப்படும் என மக்கள் நீதி மய்யம் அறிவித்துள்ளது

Leave a Reply