கமல் கட்சியில் இணைந்த பாமக பிரமுகரின் திடீர் முடிவு

அதிமுக ஆட்சி மீதும், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மீதும், அமைச்சர்கள் மீதும் பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுக்களை சுமத்திய பாட்டாளி மக்கள் கட்சி திடீரென அதிமுக கூட்டணியில் இணைந்ததால் அதிருப்தி அடைந்த அக்கட்சியின் இளைஞர் அணி மாநில செயலாளராக இருந்த ராஜேஷ்வரி கட்சியில் இருந்து விலகினார்.

பின்னர் நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யத்தில் இணைந்ததாகவும் கூறப்பட்டது. கமல்ஹாசனை ராஜேஸ்வரி சந்தித்த புகைப்படமும் வெளியானது

இந்த நிலையில் தற்போது ராஜேஸ்வரி தனிக்கட்சி ஆரம்பிக்கவுள்ளதாகவும் இதுகுறித்த அறிவிப்பை நாளை வெளியிடவுள்ளதாகவும் சற்றுமுன் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

Leave a Reply