கமல் கட்சியின் லோகோ சொல்வது என்ன? விஜய்சேதுபதி புது விளக்கம்

நடிகர் கமல்ஹாசன் திரையுலகில் கடந்த 1959ஆம் ஆண்டு களத்தூர் கண்ணம்மா என்ற திரைப்படத்தில் அறிமுகமானார். அவர் திரைலகிற்கு வந்து 60 ஆண்டுகள் நிறைவு செய்வதை அடுத்து நேற்று அவருக்கு சென்னையில் பாராட்டு விழா நடைபெற்றது

இந்த பாராட்டு விழாவில் ரஜினிகாந்த், இளையராஜா, முன்னணி நட்சத்திரங்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த விழாவில் கலந்து பிரபல நடிகர் விஜய் சேதுபதியும் கலந்து கொண்டு பேசியதாவது:

மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியின் பெயரை எனக்கு பிடித்துள்ளது கமலஹாசன் அரசியலுக்கு வந்ததே நான் வரவேற்கின்றேன் எல்லோரும் இணைந்து இருப்போம் என்பதையே கட்சியின் லவ்வும் சொல்வதாக உணர்கிறேன் இத்தனை ஆண்டுகளாக அவர் எப்படி ரசிகர்களை ஏமாற்றாமல் இருக்கிறாரோ அது போல அரசியலிலும் ஏமாற்ற மாட்டார் என்று நம்புகிறேன்

இவ்வாறு விஜய்சேதுபதி பேசினார்

Leave a Reply