கமல் கட்சிக்கு டார்ச் லைட் சின்னம்: இன்று முதல் மிளிரும் என கமல் அறிவிப்பு

கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் ‘மக்கள் நீதி மய்யம்’ என்ற அரசியல் கட்சியை தொடங்கிய நடிகர் கமல்ஹாசன் இந்த ஒரு ஆண்டில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து கட்சியை ஓரளவு மக்களிடையே பிரபலம் ஆக்கியுள்ளார்.

இந்த நிலையில் கமல் கட்சிக்கு தேர்தல் ஆணையம் ‘பேட்டரி டார்ச்’ சின்னத்தை ஒதுக்கியுள்ளது. இதுகுறித்து கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியதாவது: ‘மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு “பேட்டரி டார்ச்” சின்னம் ஒதுக்கிய தேர்தல் ஆணையத்திற்கு நன்றி. பொருத்தமான சின்னம் தான். மக்கள் நீதி மய்யம் தமிழ்நாட்டிற்கும் இந்திய அரசியலுக்கும் ஒளி தரும் புது விளக்காய் இன்று முதல் மிளிரும் என்று கூறியுள்ளார்.

மேலும் எங்களுடைய கூட்டணி மக்கள் கூட்டணி என்றும் நிச்சயம் வெல்லும் கூட்டணி என்றும், மக்களுக்கான தேர்தல் அறிக்கை தயாராகிக்கொண்டிருக்கிறது விரைவில் வெளியிடப்படும் என்றும் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

Leave a Reply