shadow

கமல்ஹாசனின் தூங்காவனத்தில் பிரபல பாடலாசிரியருக்கு முக்கிய வேடம்

thoongavanamகமல்ஹாசன் நடித்து வரும் ‘தூங்காவனம்’ படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கி வரும் நிலையில் இந்த படத்தில் பிரபல பாடலாசிரியர் ஒருவர் நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

பிரபல தெலுங்கு பாடலாசிரியர் ராமஜோகையா சாஸ்திரி என்பவர் ஏராளமான தெலுங்கு படங்களுக்கு பாடல்கள் எழுதியுள்ளார். இவர் ஏற்கனவே நாகார்ஜுனா நடித்த ‘கிங்’ என்ற படத்தில் ஒரு சிறு வேடத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் கமல்ஹாசனின் தூங்காவனம் படத்தின் டைட்டில் பாடலை பாடுவதோடு, அந்த படத்தில் ஒரு முக்கிய கேரக்டரிலும் நடித்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

இந்த படத்தில் கமல்ஹாசனுடன் த்ரிஷா, ஆஷா சரத், பிரகாஷ்ராஜ், மதுஷாலினி, சம்பத்குமார், யூகிசேது மற்றும் பலர் நடித்து வருகின்றனர். கமல்ஹாசனின் உதவியாளர் ராஜேஷ் எம்.செல்வா இயக்கி வரும் இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கின்றார். இந்த படம் வரும் தீபாவளி தினத்தில் ரிலீஸாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply