shadow

கப்பல்களில் வேலை வாய்ப்பு வேண்டுமா? உடனே விண்ணப்பியுங்கள்

ஆழ்கடல் மீன்பிடி, வணிகக் கப்பல்களில் வேலைவாய்ப்புக்கான படிப்புக்கு மே 16-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
இதுகுறித்து மத்திய கடல்சார், மீன்வள தொழில்நுட்பம், பயிற்சி நிறுவனம் சார்பில் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: தமிழக மாணவர்களுக்கு ஆழ்கடல் மீன்பிடி, வணிகக் கப்பல்களில் வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில் இந்திய அரசின் வேளாண் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் மத்திய கடல்சார், மீன்வள தொழில்நுட்பம், பயிற்சி நிறுவனம் சார்பில் ஆழ்கடல் மீன்பிடி, வணிகக் கப்பல்களில் பொறியாளர்கள், மாலுமி, கப்பல் இயக்கி, மெரைன் ஃபிட்டர் ஆகிய படிப்புகள் பயிற்றுவிக்கப்படுகின்றன.
இப்படிப்பில் சேரும் மாணவர்களுக்கு தங்கும் விடுதி வசதியுடன், மாதம்தோறும் ரூ.1,500 உதவித் தொகை வழங்கப்படுகிறது. குறைந்தபட்சம் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் கணிதம், அறிவியலில் 40 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.
மே 16-க்குள் விண்ணப்பிக்க வேண்டும்: சென்னை ராயபுரம், எஸ்.என். செட்டி தெருவில் உள்ள மத்திய கடல்சார், மீன்வள தொழில்நுட்பம், பயிற்சி நிறுவனத்தில் இதற்கான விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படுகின்றன. மேலும், www.cifnet.gov.in இணையதளத்திலும் விண்ணப்பங்களைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மே 16-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இதைத் தொடர்ந்து, ஜூன் 23-ஆம் தேதி இதற்கான நுழைவுத் தேர்வு நடத்தப்படும். மேலும் விவரங்களுக்கு 044-25952691 என்ற தொலைப்பேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply