shadow

கன்னட நடிகர் ராஜ்குமார் கடத்தல் வழக்கு: 18 ஆண்டுகளுக்குப்பின் தீர்ப்பு

கன்னட நடிகர் ராஜ்குமார் கடத்தல் வழக்கில் அனைவரையும் விடுதலை செய்து கோபிச்செட்டிப்பாளையம் நீதிமன்றம் இன்று தீர்ப்பை வழங்கியுள்ளது. இந்த வழக்கில் 18 ஆண்டுகளுக்கு பிறகு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2000ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், பெங்களூரில் இருந்து தாளவாடிக்கு மனைவி பார்வதம்மாவுடன் சென்ற கன்னட நடிகர் ராஜ்குமார், சந்தன கடத்தல் மன்னன் வீரப்பன் மற்றும் அவர் கூட்டாளிகளால் கடத்தப்பட்டார். 100 நாட்களுக்கு மேல் பிணைக்கைதியாக வைத்திருந்து பிறகு பேச்சுவார்த்தைக்கு பின்னர் ராஜ்குமார் விடுதலை செய்யப்பட்டார். இதுகுறித்து கோபி நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கில் வீரப்பன் உள்ளிட்ட 14 பேர் மீது குற்றஞ்சாட்டப்பட்டது.

இன்று வழங்கப்பட்ட தீர்ப்பில் வீரப்பன் மற்றும் கூட்டாளிகள்தான் ராஜ்குமாரை கடத்தினார்கள் என்பதற்கான உரிய ஆதாரங்களை போலீஸ் தரப்பு தெரிவிக்கவில்லை என்றும், அதனால் இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட அனைவரையும் விடுதலை செய்வதாகவும் நீதிபதி தீர்ப்பளித்தார்.

மேலும் இந்த வழக்கில் கடத்தப்பட்ட ராஜ்குமாரை விசாரிக்கவும், அடையாளம் கேட்கவும் காவல்துறை முயலவில்லை என்றும் ராஜ்குமாரின் மனைவி பார்வதம்மாளையும் விசாரிக்கவில்லை என்றும் இந்த வழக்கை போலீசார் ஏனோதானோவென விசாரித்துள்ளது என்றும் நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்தது.

Leave a Reply