கடினமான கேள்விகளை கேளுங்கள்: நாகர்கோவில் மாணவிகளுக்கு ராகுல் காந்தி வேண்டுகோள்

பாராளுமன்ற தேர்தல் பிரச்சாரத்திற்காக இன்று தமிழகம் வந்த காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி சற்றுமுன் சென்னையில் உள்ள தனியார் கல்லூரி மாணவிகளுடன் உரையாடினார்.

அப்போது அவர் சுலபமான கேள்விகளை தவிர்த்து கடினமான கேள்விகளை கேளுங்கள் என்று அவர் மாணவிகளிடம் வேண்டுகோள் விடுத்தார். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஒரே வரியாக இருக்கும், அதுவும் குறைந்த வரியாக இருக்கும் என்று ஜிஎஸ்டி தொடர்பான கேள்விக்கு பதிலளித்த ராகுல்காந்தி பாலின சமத்துவத்தில் தென் மாநிலங்கள் சிறந்து விளங்குவதாகவும், நாடாளுமன்றத்தில் 33 சதவீத பெண்களுக்கான இட ஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்ற வலியுறுத்தி வருவதாகவும் மற்றொரு கேள்விக்கு பதிலளித்தார்.

சென்னை கல்லூரி மாணவிகளுடன் உரையாடலை முடித்துவிட்டு திருவனந்தபுரம் செல்லும் ராகுல்காந்தி அங்கிருந்து நாகர்கோவிலுக்கு ஹெலிகாப்டரில் சென்று தேர்தல் பிரச்சாரம் செய்கிறார்.

Leave a Reply