shadow

கடாரம் கொண்டான் டீஸர் வெளியீடு எப்போது?

சென்ற வருடம் விக்ரம் நடிப்பில் ஹரி இயக்கத்தில் வெளியான ‘சாமி 2’ திரைப்படம் மக்களிடையே சுமாரான வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது விக்ரம் ராஜேஷ் செல்வா இயக்கத்தில் ‘கடாரம் கொண்டான்’ படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் பொங்கலை முன்னிட்டு வரும் 15 ஆம் தேதி அதாவது நாளை ‘கடாரம் கொண்டான்’ படத்தின் டீஸர் வெளியாக உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படத்தின் டிரைலரும் விரைவில் வெளியாக இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது.

சியான் விக்ரம், அக்சராஹாசன் உள்ளிட்ட பலர் நடிக்கும் இப்படத்தை உலக நாயகன் கமல்ஹாசன் மற்றும் ரவிச்சந்திரன் ஆகியோர் இணைந்து தயாரிக்கின்றனர். மேலும் இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார்.

 

Leave a Reply