‘கடாரம் கொண்டான்’ டிரைலர் ரிலீஸ் எப்போது?


உலக நாயகன் கமல்ஹாசன் தயாரிப்பில் சீயான் விக்ரம் நடிப்பில் உருவாகி வந்த ‘கடாரம் கொண்டான்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது டப்பிங் உள்பட போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் நடந்து வருகிறது.

இந்த நிலையில் இந்த படத்தின் டிரைலர் வரும் ஜூலை 3ஆம் தேதி வெளியாகவுள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். அதுமட்டுமின்றி இந்த படம் வரும் ஜூலை 19ஆம் தேதி வெளியாக அதிக வாய்ப்பு இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது.

ராஜேஷ் செல்வா இயக்கி வரும் இந்த படத்தில் விக்ரம், அக்சராஹாசன், நாசர் மகன் அபி மெஹ்தி ஹாசன், பிக்பாஸ் புகழ் மீராமிதுன் உள்பட பலர் நடித்து வருகின்றனர். ஜிப்ரான் இசையமைத்து வரும் இந்த படத்தில் ஸ்ருதிஹாசன் ஒரு பாடலை பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply