shadow

கஜா புயல்: மத்திய அரசின் முதல்கட்ட நிதி அறிவிப்பு

கடந்த மாதம் 16ஆம் தேதி டெல்டா மாவட்டங்களை தாக்கிய கஜா புயல் காரணமாக அப்பகுதி மக்கள் தங்கள் வாழ்வாதாரங்களை இழந்து நிற்கும் நிலையில் பல்வேறு தரப்பில் இருந்து நிவாரண நிதியும் நிவாரண பொருட்களும் குவிந்து வருகிறது.

இந்த நிலையில் சமீபத்தில் டெல்டா பகுதியை பார்வையிட்ட மத்திய குழு விரைவில் இதுகுறித்து மத்திய அரசிடம் அறிக்கை தாக்கல் செய்யவுள்ளது. இதனிடையே கஜா புயல் நிவாரணமாக மத்திய அரசு, தமிழகத்திற்கு ரூ 353.70 கோடி அறிவிப்பு செய்துள்ளது. மத்திய குழுவின் இறுதி அறிக்கை கிடைத்த பின் மேலும் நிதி உதவி வழங்கப்படும் என்றும் மத்திய அரசு அறிவித்துள்ளது.

ஆயிரக்கணக்கான கோடி சேதம் ஏற்பட்டுள்ள நிலையில் மத்திய அரசு வெறும் ரூ 353.70 கோடி மட்டும் ஒதுக்கீடு செய்துள்ளது தமிழக மக்களுக்கு பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

 

Leave a Reply