shadow

கஜா புயல் நிவாரணம்: அஜித் கொடுத்தது ரூ.15 லட்சமா? ரூ.5 கோடியா?

ajith கஜா புயல் நிவாரண நிதியாக கோலிவுட் திரையுலகினர் பலர் லட்சக்கணக்கிலும் கோடிக்கணக்கிலும் நிதி அளித்து வந்தனர். ஒருசிலர் நேரடியாக மக்களிடம் தங்களது ரசிகர் மன்றம் வாயிலாக நிவாரண பொருட்களை அளித்தனர்.

இந்த நிலையில் கஜா புயல் நிவாரண நிதியாக அஜித் ரூ.15 லட்சம் கொடுத்ததாக தமிழக அரசின் செய்திக்குறிப்பின் மூலம் தெரிய வந்தது.

ஆனால் அஜித்தின் தீவிர ரசிகரும், விநியோகஸ்தருமான 7ஜி சிவா நிகழ்ச்சி ஒன்றில் பேசியபோது, ‘அஜித், கஜா நிவாரணத்துக்காக ரூ.15 லட்சம் கொடுக்கவில்லை, 5 கோடி ரூபாய் கொடுத்துள்ளார் என்று கூறியுள்ளார். இதுகுறித்த வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

அஜித் தரப்பினர் இதுகுறித்து கூறியதாவது: `அஜித் செய்யும் நன்கொடைகள் குறித்த தகவல்கள் அனைத்துமே செய்தித் தொடர்பாளர், சம்பந்தப்பட்டவர்கள் வாயிலாக அதிகாரபூர்வமாக ஊடகங்களுக்கு அறிவிக்கப்படும். ஆனால், இத்தகைய போலியான தகவல்களை, அதுவும் மிகவும் உணர்வுபூர்வமான விஷயத்தில் இணையதளம் வாயிலாக பரப்புவது மிகுந்த மன வேதனையை அளிக்கிறது’’ என்றனர்.

 

Leave a Reply