shadow

கஜா புயலின்போது எட்டிப்பார்க்காத அய்யாக்கண்ணு விவசாயிகளுக்காக நடத்தும் போராடம்

டெல்லியில் தமிழக விவசாயிகள் இன்று நடத்தி வரும் போராட்டம் காரணமாக அங்கு கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

டெல்லியில் தமிழக விவசாயிகள் ராம்லீலா மைதானத்தில் இருந்து ஜந்தர் மந்தர் சென்றனர் ஜந்தர் மந்தரில் விவசாயிகள் கோஷம் எழுப்பி போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டம் காரணமாக கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதால் போக்குவரத்தை ஒழுங்குபடுத்த போலீசார் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்

மொத்தம் 7 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து இந்த போராட்டம் நடைபெற்று வருகிறது. இவற்றில் தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்பது முக்கிய கோரிக்கையாக உள்ளது. மேலும் கஜா புயல் உள்ளிட்ட இயற்கை சேதங்களால் விவசாயிகளுக்கு நிவாரணம் அளிக்க வேண்டும் மற்றும் நதிகளை இணைக்க வேண்டும், விவசாய பொருட்களுக்கு லாபகரமான விலை வைக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளுக்காகவும் இந்த போராட்டம் நடைபெறுகிறது.

இந்த போராட்டத்தில் கலந்து கொண்டுள்ள அய்யாக்கண்ணு சமீபத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள விவசாயிகளை எட்டிக்கூட பார்க்கவில்லை என்று நெட்டிசன்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

Leave a Reply