கங்கனா ‘அதுக்கு’ செட் ஆக மாட்டார்: ஸ்ரீரெட்டி

ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தை இயக்குனர் விஜய் ‘தலைவி’ என்ற டைட்டிலில் இயக்கி வரும் நிலையில் இந்த படத்தில் ஜெயலலிதா கேரக்டரில் நடிக்க பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் ஒப்பந்தமாகியுள்ளார்.

இந்த தகவல் தெரிந்ததும் பலர் ‘ஜெயலலிதா கேரக்டருக்கு கங்கனா’ பொருந்தமாட்டார் என்றே கூறினர். இதனை நடிகை ஸ்ரீரெட்டியும் தற்போது கூறியுள்ளார். இதுகுறித்து அவர் தனது ஃபேஸ்புக்கில் கூறியபோது, ‘இரும்புப்பெண்மணி என்ற பெயர் பெற்ற ஜெயலலிதா கட்சியையும் ஆட்சியையும் தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தார். அவருக்கு இணையாக யாரும் இல்லை. எனக்கு தெரிந்து ஜெயலலிதா கேரக்டரில் நடிக்க பொருத்தமானவர்கள் யாரும் இல்லை. குறிப்பாக ஜெயலலிதா கேரக்டருக்கு கங்கனா பொருத்தமானவர் இல்லை. அவருக்கு பதிலாக தென்னிந்திய நடிகைகளில் யாராவது ஒருவரை தேர்வு செய்திருக்கலாம் என்று கூறியுள்ளார்.

ஜெயலலிதா கேரக்டருக்கு த்ரிஷா அல்லது நயன்தாரா பொருத்தமாக இருப்பார் என்பதே பலரது கருத்தாக உள்ளது

Leave a Reply