ஓலா, உபேருக்கு ஆப்பு: தமிழக அரசே ஆப் துவங்க ஆட்டோக்காரர்கள் கோரிக்கை

ஓலா, உபேர் போன்ற தனியார் கார்ப்பரேட் நிறுவனங்கள் மூலதனமே இல்லாமல் ஒரே ஒரு செல்போன் ஆப் மூலம் ஆட்டோ தொழிலாளிகளின் உழைப்பை சுரண்டுவதாகவும் இதற்கு ஆப்பு வைக்கும் அளவில் மாநில அரசே ஆப் துவக்க வேண்டும் என்றும் அவ்வாறு துவக்கினால் மீட்டரை இயக்க அனைவரும் தயார் என்றும் ஆட்டோ தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

நேற்று சென்னை கலெக்டர் அலுவலகம் அருகே ஆட்டோ டிரைவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தின் போது ஆட்டோ டிரைவர்கள் சங்கத்தின் தலைவர் சம்பத் நிருபர்களிடம் கூறியதாவது:- மூலதனமே இல்லாமல், வெறும் ‘செல்போன் ஆப்’களை மட்டும் உருவாக்கிக்கொண்டு கார்ப்பரேட் நிறுவனங்கள் ‘ஆன்-லைன்’ மூலம் டாக்சி, மோட்டார் சைக்கிள் சேவையில் ஈடுபட்டு ஆட்டோ தொழிலாளர்களின் உழைப்பை சுரண்டுகிறார்கள். இவர்களுக்கு மத்திய, மாநில அரசுகள் பச்சை கொடி காட்டுகிறார்கள்.

மாநில அரசு ஆட்டோக்களுக்கான ‘செல்போன் ஆப்’களை உருவாக்க வேண்டும். இதை செயல்படுத்தினால் மீட்டர் கட்டணத்துக்கு ஆட்டோவை இயக்க தொழிலாளர்கள் தயாராக இருக்கிறார்கள். இதனை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

Leave a Reply