shadow

ஓட்ஸ் கார உருண்டை செய்வது எப்படி?

சர்க்கரை நோய் உள்ளவர்கள் நொறுக்குத்தீனி சாப்பிடக்கூடாது என்று சொல்வதுண்டு. ஆனால் அவர்களுக்கு என பிரத்யேகமாக சில நொறுக்குத்தீனிகள் உண்டு. அவற்றை சாப்பிட்டால் ஒரு பிரச்சனையும் இருக்காது. அந்த வகையில் ஓட்ஸ் கார உருண்டையும் ஒன்று. இதை எப்படி செய்வது என பார்ப்போம்

தேவையான பொருட்கள் :

ஓட்ஸ் – ஒரு கப்,
காய்ந்த மிளகாய் – 4,
தேங்காய் – ஒரு துண்டு,
கறிவேப்பிலை – சிறிது,
கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு – தலா ஒரு டீஸ்பூன்,
சீரகம் – அரை டீஸ்பூன்,
எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை :

ஓட்ஸை வாசனை வரும் வரை வறுத்து, மிக்சியில் போட்டு ரவை பதத்தில் உடைத்துக் கொள்ளவும்.

தேங்காயை பல்லு பல்லாக நறுக்கி வைக்கவும்.

கடாயில் எண்ணெய் விட்டு, மிளகாயை கிள்ளிப் போட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப் பருப்பு, சீரகம், கறிவேப்பிலை போட்டுத் தாளித்த பின்னர் நறுக்கி வைத்துள்ள தேங்காயை சேர்த்து சிவக்க வறுத்துக் கொள்ளவும்.

பின்னர் அதில் ஓட்ஸ், உப்பு சேர்த்து, குறைவாகத் தண்ணீர் ஊற்றி, நன்றாக கிளறி இறக்கவும்.

சூடு ஆறிய பின்னர் சிறிய உருண்டைகளாக பிடித்து வைக்கவும். இப்படி எல்லாவற்றையும் செய்து கொண்டு ஆவியில் 10 நிமிடங்கள் வேக வைத்து எடுக்கவும்.

Leave a Reply