ஓட்டல் அறை வாடகைக்கு வரி கிடையாது! நிர்மலா சீதாராமன் அதிரடி அறிவிப்பு

சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் வகையில் ரூபாய் ஆயிரம் வரை வாடகை வசூல் செய்யும் ஹோட்டல் அறைகளுக்கு வரி கிடையாது என்ற ஒரு அதிரடி அறிவிப்பை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் வெளியிட்டுள்ளார்

இந்த அறிவிப்பின்படி ரூபாய் 1000 வரையிலான ஓட்டல் அறை வாடகைக்கு வரி கிடையாது என்றும், 1001 முதல் 7500 வரை ஒரு இரவு தங்க வாடகை வசூலித்தால் அதற்கு 12% ஜிஎஸ்டி வரி விதிக்கப்படும் என்றும், அதேபோல் 7500 மேல் வாடகை வசூலிக்க 18 சதவீதம் வரி வசூலிக்கப்படும் என்றும் தெரிவித்திருந்தார்

முன்னதாக இந்த இரண்டு வகை வாடகைக்கு 18 மட்டும் 28 சதவீத வரி வசூலிக்கப்பட்டு வந்தது என்பது குறிப்பிடப்பட்டது. நிர்மலா சீதாராமன் அவர்களின் இந்த அறிவிப்பை அடுத்து சுற்றுலாத் துறை மேம்படும் என்றும் ஹோட்டல் அறையில் தங்கும் சுற்றுலா பயணிகளின் சுமை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

Leave a Reply