shadow

ஒவ்வொரு மாணவரின் புத்தகப்பை எடை எவ்வளவு இருக்க வேண்டும்? சுற்றறிக்கை

நாடெங்கிலும் பரவி வரும் டிஜிட்டல், பள்ளிகளிலும் பரவி வருவதால் மாணவர்கள் கொண்டு செல்லும் புத்தகைப்பையின் எடை குறைந்து கொண்டே வருகிறது. இந்த நிலையில்
ஒவ்வொரு மாணவரின் புத்தகப்பை எடை எவ்வளவு இருக்க வேண்டும்? என்பது குறித்த சுற்றறிக்கை ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதன்படி

1 மற்றும் 2-ம் வகுப்பு மாணவர்களின் புத்தகப்பை எடை 1½ கிலோ

3 முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களின் புத்தகப்பை எடை 2 முதல் 3 கிலோ

6 மற்றும் 7-ம் வகுப்பு மாணவர்களின் புத்தகப்பை எடை 4 கிலோ

8 மற்றும் 9-ம் வகுப்பு மாணவர்கள் புத்தகப்பை எடை 4½ கிலோ

10-ம் வகுப்பு மாணவர்களின் புத்தகப்பை எடை 5 கிலோவுக்கு அதிகம் இருக்கக்கூடாது.

பல தனியார் பள்ளிகளில் இந்த முறை எதுவும் நடைமுறையில் இல்லாததால் இன்றளவும் பல பள்ளிகளில் கூனி குனிந்தபடி புத்தகப்பையை மாணவ-மாணவிகள் சுமந்து சென்ற வண்ணம் இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது..

Leave a Reply