ஒலிம்பிக் தேவையில்லை, உள்ளூர் விளையாட்டு போதும்: சீனிவாச கவுடா

பெங்களூரில் சமீபத்தில் நடந்த கம்பாலா என்ற பாரம்பரிய விளையாட்டு போட்டியில் உசேன் போல்ட்டை விட மிக வேகமாக ஓடி சாதனை செய்த சீனிவாச கவுடாவுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

இந்த நிலையில் மத்திய விளையாட்டு துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ அவர்கள் சீனிவாச கவுடாவை ஒலிம்பிக்கிற்கு தயார்படுத்த பெங்களூரில் உள்ள இந்திய விளையாட்டு அத்தாரிட்டியில் பயிற்சியில் சேர ஏற்பாடு செய்தார்

ஆனால் இந்த வாய்ப்பை தட்டிக்கழித்த சீனிவாச கவுடா,’ஓட்டப்பந்தயம் வேறு கம்பாலாவில் ஓடுவது வேறு. எனக்கு இந்தப் போட்டி தான் பிடித்துள்ளது. நான் எந்த பயிற்சியிலும் பங்கேற்கப் போவதில்லை. தொடர்ச்சியாக மார்ச் 10ஆம் தேதி வரை பல போட்டிகளில் நான் பிஸியாக இருப்பேன். இது முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்டது என்பதால் இதனை தவிர்த்து விட்டு பயிற்சிக்கு என்னால் செல்ல முடியாது. எனவே நான் அமைச்சரின் கோரிக்கையை ஏற்கவில்லை என்று தெரிவித்தார்

ஒலிம்பிக் போட்டியில் விளையாடும் வாய்ப்பை தட்டிக்கழித்து பாரம்பரிய விளையாட்டிலேயே தொடர்ந்து ஈடுபட இருப்பதாக சீனிவாச கவுடா கூறியிருப்பதற்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

Leave a Reply