ஒரே வாரத்தில் ‘பிகில்’ ஆடியோ: அர்ச்சனாவின் அசர வைக்கும் அப்டேட்!
தளபதி விஜய் நடித்த ‘பிகில்’ திரைப்படத்தின் ஆடியோ ரிலீஸ் தேதியை அந்தப் படத்தின் நிர்வாக தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாதி அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்
செப்டம்பர் 19-ஆம் தேதி பிகில் திரைப்படத்தின் ஆடியோ வெளியாகும் என்றும் அன்றைய தினம் ஏஆர் ரகுமான் அவர்களின் உலகத்தரமான இசை நிகழ்ச்சியை கண்டு ரசிக்கலாம் என்றும் இந்த தினத்தை நான் ஒவ்வொரு வருடமும் ஆவலுடன் எதிர்பார்ப்பேன் என்றும் அந்த தினம் தற்போது வந்துவிட்டது என்றும் அர்ச்சனா கல்பாத்தி தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்
இதனை அடுத்து வரும் இன்னும் ஒரே ஒரு வாரம் மட்டுமே இருக்கும் பிகில் திரைப்படத்தின் ஆடியோ ரிலீஸ் விழாவை நேரில் கண்டு ரசிக்க விஜய் ரசிகர்கள் தயாராகி வருகின்றனர். ‘பிகில்’ திரைப்படத்தின் ஆடியோ ரிலீஸ் நடைபெறும் இடம் மற்றும் நேரம் குறித்த தகவல்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்
ஆடியோ ரிலீஸ் குறித்த இந்த அப்டேட் விஜய் ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது. இன்னும் ஒரு வாரம் மட்டுமே இருக்கும் நிலையில் இந்த ஒரு வாரமும் விஜய் ரசிகர்களின் கட்டுப்பாட்டில்தான் டுவிட்டர் உள்பட சமூக இணையதளங்கள்இருக்கும் என்றும் இந்த படத்தின் அப்டேட்கள் அடுத்தடுத்து வெளியாகி விஜய் ரசிகர்களை உற்சாகப்படுத்துவதோடு உலக அளவில் இந்த அப்டேட் ஆகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது
Leave a Reply
You must be logged in to post a comment.