ஒரே வங்கியில் 22 ஆயிரம் போலி கணக்குகள்: சிக்கியது முக்கிய வங்கி!

பிஎம்சி என்று அழைக்கப்படும் பஞ்சாப் மற்றும் மஹாராஷ்டிரா கூட்டுறவு வங்கியில் 22 ஆயிரம் போலி கணக்குகள் ஆரம்பிக்கப்பட்டு மோசடி செய்ததாக எழுந்துள்ள குற்றச்சாட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

பிஎம்சி வங்கி தான் கொடுத்த கடன்களை மறைப்பதற்காக 21ஆயிரம் போலியானக் கணக்குகளை உருவாக்கியுள்ளதாகவும் இதுகுறித்து மும்பை காவல்நிலையத்தில் பொருளாதார குற்றப்பிரிவு அதிகாரிகள் புகார் அளித்துள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது

இந்த போலி கணக்குகள் மூலம் சுமார் ரூ.4,355 கோடி மறைக்கப்பட்டுள்ளதாகவும், ஒரெ ஒரு தனி நிறுவனத்துக்கு மட்டும் 44 வங்கி கடன்கள் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் வங்கியின் உண்மையான நிதி நிலை மறைக்கப்பட்டுள்ளதாகவும் அந்த புகாரில் கூறப்பட்டுள்ளது

இது குறித்து விசாரணை நடத்தப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என பொருளாதார குற்றப்பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

 

Leave a Reply