shadow
ஒரே நேரத்தில் நாடு முழுவதும் தேர்தல்: மத்திய அரசு திட்டம்
நாடு முழுவதும் ஒரே வரி என்ற ஜிஎஸ்டி சமீபத்தில் நடைமுறைக்கு வந்தது போல், நாடு முழுவதும் ஒரே நேரத்தில் தேர்தல் என்ற அடுத்த திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்துவதில் தீவிரமாக இருப்பதாக மத்திய சிறுபான்மை நலத்துறை அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி தெரிவித்துள்ளார்.
நாட்டின் ஒவ்வொரு பகுதியில் ஒவ்வொரு நேரத்தில் தேர்தல் நடத்துவதால் தேர்தல் கமிஷனுக்கு கூடுதல் வேலைப்பளு வருவதோடு, செலவும் அதிகமாகிறது. எனவே நாடு முழுவதும் ஒரே நேரத்தில் பாராளுமன்றத்திற்கும், அனைத்து மாநிலங்களின் சட்டசபைகளுக்கும் தேர்தல் நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக கடந்த சில மாதங்களாக கூறப்பட்டு வந்தது.
இதை உறுதி செய்வதை போல் இதுகுறித்து மத்திய சிறுபான்மை நலத்துறை அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி  நாடு முழுவதும் ஒரே தேர்தல் என்பது குறித்த விவாதங்கள் அதிகரித்து வருவது வரவேற்கத்தக்கது என்று கூறியுள்ளார். எனவே வரும் 2019ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலின்போது தமிழகம் உள்பட அனைத்து மாநிலங்களின் சட்டசபை தேர்தலும் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply