ஒரே நேரத்தில் குரு-சிஷ்யன் படங்களில் நடிக்கும் விஜய்சேதுபதி!
விஜய்சேதுபதி நடித்த படங்களை இயக்கிய இயக்குனர்கள் மீண்டும் குறுகிய காலத்தில் அவரை வைத்து படம் இயக்குவது வழக்கமான ஒன்றாக உள்ளது. அந்த வகையில் விஜய்சேதுபதி நடித்த ‘பண்ணையாரும் பத்மினியும், ‘சேதுபதி’ போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் அருண்குமார் தற்போது விஜய்சேதுபதி நடித்து வரும் படம் ஒன்றை இயக்கி வருகிறார் என்பதும் இந்த படத்திற்கு ‘சிந்துபாத்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது என்பதும் தெரிந்ததே
இந்த நிலையில் இயக்குனர் அருண்குமாரின் உதவியாளர் பிரபு இயக்கும் படம் ஒன்றிலும் விஜய்சேதுபதி நடிக்கவுள்ளார். இந்த படத்தில் விஜய்சேதுபதி முதல்முறையாக வாலிபால் விளையாட்டு வீரராக நடிக்கவுள்ளதாகவும், அதற்காக தினமும் சில மணி நேரங்கள் அவர் வாலிபால் விளையாடி பயிற்சி பெறுவதாகவும் கூறப்படுகிறது
லைகா புரடொக்சன்ஸ் தயாரிக்கும் இந்த படத்தில் நடிக்கும் நாயகை உள்பட மற்ற நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது
Leave a Reply
You must be logged in to post a comment.