shadow

ஒரே ஒரு பாடலுக்கு நடனமாட ஒப்புக்கொள்வது ஏன்? தமன்னா

tamannah1தமிழ், தெலுங்கு ஆகிய இரண்டு மொழி திரையுலகிலும் முன்னணி நடிகையாக இருந்தாலும் நடிகை தமன்னா அவ்வப்போது ஒருசில திரைப்படங்களில் ஒரு பாடலுக்கு நடனம் ஆட ஒப்புக்கொள்கிறார்.

இதுகுறித்து அவர் சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியபோது, ‘நடனத்திறமையை வெளிப்படுத்தும் முயற்சியாகவே இந்த வாய்ப்புகளை ஒப்புக்கொள்வதாக தெரிவித்துள்ளார்.

நான் கதாநாயகியாக நடிக்கும் படங்களில் நடனமாட போதுமான வாய்ப்பு வரவில்லை என்றும், அதனால் தனது நடனத் திறமையை வெளிப்படுத்தவே, அவ்வப்போது சில பாடல்களுக்கு நடனமாடுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்

இதனையடுத்து ஒரு பாடலுக்கு நடனம் ஆட தமன்னாவுக்கு வாய்ப்புகள் குவிந்து வருகிறது. இருப்பினும் ஒரு பாடலுக்கு நடனம் ஆடவே அவர் கிட்டத்தட்ட ஒரு படத்திற்கு வாங்கும் சம்பளம் பெறுகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply