shadow

ஒரே ஒரு தொகுதிக்காக முதல்வரை பாராட்டுகிறாரா ஜிகே வாசன்

அதிமுக கூட்டணியில் பாஜக, பாமக, தேமுதிக, மற்றும் தமாக ஆகிய கட்சிகள் உறுதி என கிட்டத்தட்ட முடிவாகிவிட்டதால், தமிழக அரசையும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியையும் இக்கட்சிகளின் தலைவர்கள் பாராட்ட தொடங்கிவிட்டனர்

அந்த வகையில் நேற்று திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே. வாசன், தமிழகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான இந்த 2 ஆண்டு கால ஆட்சி சிறப்பாக உள்ளதாகவும், இனி வரும் காலத்திலும் நிலுவையில் உள்ள பணிகளை முதல்வர் சிறப்பாக விரைந்து முடிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளர்,.மேலும், வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமாகாவின் பலத்தை மதிக்கும் கட்சியுடன் கூட்டணி அமைக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

அதிமுக கூட்டணியில் தமாகவுக்கு ஒரு தொகுதி கொடுக்க வாய்ப்பு இருப்பதாகவும் அந்த தொகுதியில் ஜிகே வாசன் போட்டியிடுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஒரே ஒரு தொகுதிக்காக தமிழக அரசை ஜிகே வாசன் பாராட்டுவதாக வழக்கம்போல் நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

 

Leave a Reply