shadow

ஒரு மொழியை கற்பதா வேண்டாமா என்று முடிவு செய்வது மாணவர்கள்தான். கருணாநிதி அல்ல. தமிழிசை

tamilisaiதமிழ்நாட்டில் இந்தி மொழிக்கு எதிர்ப்பு தெரிவித்து மொழி எதிர்ப்பு மூலம் அரசியல் நடத்தி வந்த திமுக தலைவர் கருணாநிதி தற்போது மீண்டும் மொழிக்கு எதிராக அதாவது சமஸ்கிருதம் மொழிக்கு எதிராக தனது அரசியலை தொடங்கியுள்ளார்.

சமஸ்கிருதத்திற்கு தமிழ்நாட்டிலே இடம் கிடையாது, சமஸ்கிருதத்திற்கு தமிழ் நாட்டில் மாத்திரமல்ல; எந்த மொழி பேசுகின்ற மக்களிடமும் சமஸ்கிருதத்தை யார் திணித்தாலும் அதை ஓட ஓட விரட்டுவோம் என தி.மு.க தலைவர் கருணாநிதி சமீபத்தில் அறிக்கை ஒன்றினை விடுத்துள்ளார்.

கருணாநிதியின் இந்த அறிக்கைக்கு தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்திரராஜன் தற்போது பதிலளித்துள்ளார். அவர் அளித்துள்ள பேட்டியில், “நாட்டின் எல்லையை தாண்டினால் ஆங்கிலம் தேவைப்படுவதைபோல், ஒரு மாநிலத்தை தாண்டி சென்றால் இந்தி தேவைப்படுகிறது. அதை கற்க வேண்டுமா? வேண்டாமா? என்பதை மாணவர்கள் தான் முடிவு செய்ய வேண்டும். கருணாநிதியோ மற்ற தலைவர்களோ யார் எந்த மொழியில் படிக்க வேண்டும் என்பதை முடிவு செய்யும் உரிமை கிடையாது.

மத்திய பாடத்திட்டத்தில் எந்த ஒரு மொழியையும் மாணவர்கள் விரும்பினால் எடுத்து கொள்ளலாம். திணிக்கப்படாது என மத்திய அரசு தெளிவாக கூறியுள்ளதை கருணாநிதி புரிந்து கொள்ள வேண்டும்’ என்று கூறியுள்ளார்.

Chennai Today News: None has right to say study in this language. Tamilisai

Leave a Reply