shadow

ஒரு ஓட்டு கூட இல்லை: அதிர்ச்சியில் ராஜபக்சே

சமீபத்தில் ராஜபக்சே பெரும்பான்மையை நிரூபிக்க முடியாததால் பிரதமர் பதவியை இழந்த நிலையில் தற்போது இலங்கை நாடாளுமன்றத்தில் சபாநாயகர் நியமனம் செய்த தேர்வுக்குழு மீது நடத்தப்பட்ட ஓட்டெடுப்பிலும் ராஜபக்சே அணி மீண்டும் தோல்வி கண்டதால் அவருக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இலங்கை நாடாளுமன்றம் நேற்று மீண்டும் கூடியபோது சபாநாயகர் 12 பேர் கொண்ட தேர்வுக்குழு பட்டியலை வெளியிட்டார். அதில் அதிபர் சிறிசேனா தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணியில் 5 உறுப்பினர்களும், ஐக்கிய தேசிய கட்சியில் 5 உறுப்பினர்களும், தமிழ் தேசிய கூட்டமைப்பு, ஜனதா விமுக்தி பெரமுனா ஆகியவற்றின் சார்பில் தலா ஒரு உறுப்பினர்களும் இடம் பெறுவார்கள் என்று சபாநாயகர் அறிவித்தார். தமிழ் தேசிய கூட்டமைப்பும், ஜனதா விமுக்தி பெர முனாவும் ஏற்கனவே ஐக்கிய தேசிய கட்சிக்கு ஆதரவு தெரிவித்து இருப்பதால் தேர்வுக்குழுவிலும் விக்ரமசிங்கேயின் கையே ஓங்கியது.

இதைத்தொடர்ந்து தேர்வுக்குழு நியமனத்திற்கு ஒப்புதல் அளிக்கும் விதமாக ஓட்டெடுப்பு நடத்தும்படி ஜனதா விமுக்தி பெரமுனா எம்.பி. விஜிதா கேட்டக் கொண்டார். இதையடுத்து ஓட்டெடுப்பு நடத்தப்பட்டது. இதில் சபாநாயகரின் முடிவுக்கு ஆதரவாக 121 ஓட்டுகள் கிடைத்தன. எதிராக, அதாவது ராஜபக்சேவுக்கு ஆதரவாக ஒரு ஓட்டு கூட கிடைக்கவில்லை. இதனால் ராஜபக்சே அதிர்ச்சி அடைந்துள்ளார்.

Leave a Reply