உலக அளவில் ஒருநாள் கொரோனா பாதிப்பில் இந்தியா முதலிடத்தை பிடித்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று ஒரே நாளில் 63,986 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், உலகளவில் கொரோனா 24 மணி நேரத்தில் கொரோனா அதிகம் பாதித்தோரின் எண்ணிக்கையில் இந்தியா முதலிடம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் 2,589,208 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்பதும், இதுவரை 50,084 பேர் பலியாகிவிட்டனர் என்பதும் 1,860,672 பேர் குணமாகியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ரஷ்யாவில் 9.17 லட்சம் பேரும், தென்னாப்பிரிக்காவில் 5.83 லட்சம் பேரும், பெருவில் 5.16 லட்சம் பேரும், மெக்சிக்கோவில் 5.11 லட்சம் பேரும், கொலம்பியாவில் 4.56 லட்சம் பேரும், சிலியில் 3.83 லட்சம் பேரும், ஸ்பெயினில் 3.58 லட்சம் பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

Leave a Reply