shadow

ஐ.எம்.ஓ மூலம் பணம் அனுப்புவது எப்படி என்று தெரியுமா?

உங்களுக்கு நெருக்கமான ஒருவர் வெளியூர் செல்கின்றார். அங்கே வேறு யாரும் அதிகம் பழக்கமில்லை, அங்கு திடீரென ஏடிஎம் கார்டு உட்பட பணப்பையை தவறவிட்டு விடுகிறார். இப்படி ஒரு சூழலை நினைத்துப் பாருங்கள் .நீங்கள் அவருக்கு எப்படி இங்கிருந்தே உதவுவது. மிகச்சுலபம், அருகில் உள்ள ஏதாவது ஒரு பெரிய தபால் நிலையம் செல்லுங்கள், அங்கே ஐ.எம்.ஓ அனுப்பவேண்டும் என்று சொல்லுங்கள். விண்ணப்பத்தில், பெறுநர், அனுப்புநர் விபரம் மற்றும் அனுப்ப விரும்பும் தொகை மூன்றையும் நிரப்பி பணத்தை செலுத்தினால், உங்களுக்கு ஒரு சீல் செய்யப்பட்ட கவர் தரப்படும்.

வெளியே வந்து அந்த கவரை பிரித்தால் உள்ளே ஒரு 16 இலக்க எண் இருக்கும், அந்த நம்பரை உங்களுக்கு நெருக்கமான அந்த நபருக்கு எஸ்.எம்.எஸ் செய்யுங்கள், அந்த எண் என்ன என்று அந்த கவரை உங்களுக்கு கொடுத்த தபால்நிலைய ஊழியருக்கு கூட தெரியாது. இந்த எண்ணை பெறும் உங்களுக்கு நெருக்கமான அநத நபர் அவர் இருக்கும் ஊரில் உள்ள தபால் நிலையத்துக்கு சென்று அங்குள்ள விண்ணப்பத்தில் இந்த 16 இலக்க எண்ணை எழுதி கொடுத்தால் உடனே பணம் கொடுக்கப்படும்.

ரூ.1000 முதல் ரூ.50,000 வரை அனுப்பலாம். இந்த சேவை இந்தியா முழுவதும் சுமார் 40,000 இடங்களில் உள்ளது, தமிழ்நாட்டில் மட்டும் சுமார் 1500 கிளைகளில் இந்த சேவைகிடைக்கும்.

Leave a Reply