ஐஸ்வர்யாராயை அசிங்கப்படுத்திய நடிகருக்கு நோட்டீஸ்

ஐஸ்வர்யாராயின் முன்னாள் காதலர் என்று கூறப்படும் நடிகர் விவேக் ஓபராய் தனது டுவிட்டர் பக்கத்தில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு குறித்த மீம்ஸ் ஒன்றை பதிவு செய்துள்ளார். அதில் ஐஸ்வர்யாராயை கேவலப்படுத்தும் வகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கு கடும் கண்டனங்கள் எழுந்து வரும் நிலையில் இதுகுறித்து விளக்கம் கேட்டு தேசிய பெண்கள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்த நோட்டிஸூக்கு விவேக் ஓபராய் சரியான விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் இல்லையெனில் அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தேசிய பெண்கள் ஆணையம் கூறியுள்ளது

Leave a Reply