ஐந்து ஆண்டுகளில் மூன்று மடங்கு உயர்ந்துள்ள ராகுலின் சொத்து மதிப்பு

வரும் மக்களவை தேர்தலில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அமேதி மற்றும் வயநாடு ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறார்.

இதனையடுத்து நேற்று வயநாடு வந்த ராகுல் காந்தி வேட்புமனுவை தாக்கல் செய்தார். அதன்பின்னர் பேரணியாக சென்று தொண்டர்கள் அளித்த உற்சாக வரவேற்பை பெற்றார்.

அதை தொடர்ந்து ராகுல் காந்தியின் வேட்புமனு சார்ந்த விவரங்கள் வெளிவந்தன. அதில் ராகுலின் மொத்த சொத்து மதிப்பு ரூ. 15.9 கோடி என அவர் குறிப்பிட்டுள்ளார். அதன்படி, அவருடைய அசையும் சொத்துக்களின் மதிப்பு ரூ. 5.8 கோடி எனவும், அசையா சொத்துக்களின் மதிப்பு ரூ. 10.08 கோடி என ராகுல் தெரிவித்துள்ளார்.

கடந்த 2014ம் ஆண்டு மக்களவை தேர்தலின் போது ராகுல் காந்தி தனது வேட்புமனுவில் குறிப்பிட்ட சொத்து மதிப்பை விட ரூ. 9.4 கோடி அளவில் அவருடைய சொத்து தற்போது அதிகரித்துள்ளது. கிட்டத்தட்ட கடந்த முறை தற்போது ராகுலின் சொத்து மதிப்பு 69 சதவீதம் உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply