shadow

ஐசிஐசிஐ வங்கியின் முன்னாள் சிஇஓ சாந்தா கோச்சார் மீது இன்று விசாரணை!

ஐசிஐசிஐ வங்கியின் முன்னாள் சிஇஓ சாந்தா கோச்சார், வீடியோகான் மேலாண் இயக்குநர் வேணுகோபால் தூத் ஆகியோர் அமலாக்கத்துறை அதிகாரிகள் முன் இன்று ஆஜராகவுள்ள நிலையில் அவர்களிடம் விசாரனை நடக்கவுள்ளது

கடந்த 2012ஆம் ஆண்டில் வீடியோகான் குழுமத்திற்கு, ஐசிஐசிஐ வங்கி 3,250 கோடி ரூபாய் கடன் வழங்கியது. இந்த கடன் விதிமுறைகளுக்கு மாறாக வழங்கப்பட்டதாகவும் அதற்கு கைமாறாக வீடியோகான் மேலாண் இயக்குநர் வேணுகோபால் தூத், சாந்தா கோச்சாரின் கணவர் நடத்தும் நியூபவர் நிறுவனத்தில் 64 கோடி ரூபாய் முதலீடு செய்ததாகவும் குற்றச்சாட்டுகள் கூறப்பட்டன.

வங்கி நடத்தை விதிமுறைகளை மீறி கடன் வழங்கப்பட்டதாக நீதிபதி பி.என்.ஸ்ரீகிருஷ்ணா குழு குற்றம்சாட்டியதை அடுத்து, ஐசிஐசிஐ வங்கியின் மேலாண் இயக்குநர் மற்றும் சிஇஓ பொறுப்பில் இருந்து சாந்தா கோச்சார் நீக்கப்பட்டார். மேலும் சாந்தா கோச்சார், அவரது கணவர் தீபக் கோச்சார், வீடியோகான் குழும மேலாண் இயக்குநர் வேணுகோபால் தூத் உள்ளிட்டோர் மீது சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்தன. இதன் அடிப்படையில் இன்று விசாரணைக்கு ஆஜராகுமாறு சாந்தா கோச்சார், வீடியோகான் குழும மேலாண் இயக்குநர் வேணுகோபால் ஆகியோர்களுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளதை அடுத்து இருவரும் ஆஜராகின்றனர்

Leave a Reply