shadow

ஏற்றத்தில் பிட்காயின்… என்ன காரணம்?

பிட்காயின்’ என்னும் கரன்சியின் மதிப்பு, எப்போதும் இல்லாத அளவுக்கு பலமடங்கு ஏற்றம் கண்டுள்ளது. உலகச் சந்தையில் இந்த விர்ச்சுவல் பணத்தின் மதிப்பு முதல்முறையாக 1800 டாலர்களாக ஏற்றம் கண்டுள்ளது. சங்கேதக் குறியீடுகளைப் பயன்படுத்தி மின்னணு முறையில் இயங்கிவரும், கண்ணுக்குத் தெரியாத இந்த கம்ப்யூட்டர் பணம் எப்போதும் பாதுகாப்பாக இருக்கும் என்கிற நம்பிக்கை பரவலாக உள்ளது. இதனாலேயே பலரது கவனத்தையும் இந்த பிட்காயின் பெற்று வருகிறது.

2009-ல் எந்தவித விளம்பரமும் இல்லாமல், டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைக்காக முதல்முதலாக பிட்காயின் அறிமுகமானபோது அதன் மதிப்பு வெறும் 25 டாலர் மட்டுமே. ஆனால், கடந்த வியாழனன்று (மே 11,2017) பிட்காயின் மதிப்பு வரலாறு காணாத உச்சத்தைத் தொட்டது. இனிவரும் காலங்களில் இதன் மதிப்பு அதிவிரைவாக 4000 டாலர்கள் வரை அதிகரிக்கும் என நிபுணர்கள் சொல்கின்றனர்.

உலகின் எந்த நாட்டுக்கும் சொந்தமில்லாத ஒரு மறைமுகப் பணம் ‘பியர்-டு-பியர் கம்ப்யூட்டிங்’ என்னும் தொழில்நுட்ப முறையில் இயங்கி வருகிறது. பணப்பரிமாற்றமாக இல்லாமல், பண்டமாற்று முறையில் பயன்படுத்தப்படுவதே இதற்கு அதிக அளவில் முதலீட்டாளர்கள் கிடைக்கக் காரணம். மேலும், மூன்றாம் நபர் தலையீடு ஏதுமின்றி, நேரடியாக பரிவர்த்தனை நடப்பதும் இதிலுள்ள பெரிய ப்ளஸ்.

எந்தவித அதிகாரபூர்வ உத்தரவாதங்கள் இல்லாத போதிலும், இந்த பிட்காயின் முதலீடுகள் அதிகரித்த வண்ணமே உள்ளன. அமெரிக்கா போன்ற பெரிய நாடுகளைச் சேர்ந்த துப்பறியும் புலிகளின் கண்களில் சிக்காமல், பிட்காயின் வர்த்தகம் கனஜோராக நடந்து வருகிறது. கடந்த திங்கள்கிழமை, பிட்காயினின் சந்தை மூலதன மதிப்பு 3 மில்லியன் டாலர்களாக இருந்தது. இதெல்லாம் எடுபடாது எனப் பலரும் நினைத்த வேளையில், எல்லோரையும் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது இந்த பிட்காயின்.

Leave a Reply