மத்திய அரசு அறிவிப்பு

நேற்று இரண்டாம் கட்ட ஊரடங்கு உத்தரவை பிறப்பித்த பிரதமர் மோடி, இந்த ஊரடங்கின் நெறிமுறைகள் குறித்து இன்று அறிவிக்கப்படும் என்று தெரிவித்தார். அதன்படி சற்றுமுன் மத்திய அரசு வெளியிட்ட நெறிமுறைகள் பின்வருமாறு

* ஏப்ரல் 20ஆம் தேதி முதல் சிறு, குறு தொழிலில் ஈடுபடுவோர் பணிகளை தொடரலாம். முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியுடன் தொழிலாளர்கள் பணியாற்ற வேண்டும்

* ஏப்ரல் 20 முதல் விவசாயம், தோட்டக்கலை, பண்ணைத் தொழில், விளைபொருள் கொள்முதலுக்கு அனுமதி

* அனைத்து கல்வி நிலையங்கள், பொது போக்குவரத்து சேவைகள் இயங்க தடை

* அத்தியாவசிய பணிகளை மேற்கொள்ளும் அரசு அலுவலகங்கள் மட்டும் இயங்க அனுமதி

* வரும் 20ந் தேதிக்கு பிறகு மக்கள் நெருக்கம் குறைவான தொலைதூரப் பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகள் இயங்க அனுமதி

* கட்டுமானப்பணிகள் நடைபெறவும் மத்திய அரசு அனுமதி

* வேளாண் தொடர்புடைய அனைத்து பணிகளையும் தொடங்க அனுமதி

* ஏப்ரல் 20க்கு பின் ஊரக வேலை வாய்ப்பு திட்ட பணியாளர்கள் வேலைக்கு செல்லலாம். ஆனால் மாஸ்க் அணிவது கட்டாயம்

* ஏப்ரல் 20இல் மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகளை குறித்து மாநில அரசுகளே முடிவு செய்யலாம். ஆனால் ஊரடங்கு விதிகளுக்கு உட்பட்டு இருக்க வேண்டும்

* ஏப்ரல் 20ஆம் தேதிக்கு பின் பிளம்பர், எலெக்ட்ரீஷியன், தச்சுவேலை, மோட்டார் மெக்கானிக் தொழில் செய்வோர் செயல்பட அனுமதி

இவ்வாறு மத்திய அரசு ஊரடங்கு உத்தரவு குறித்த நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது

Leave a Reply