shadow

ஏப்ரல் 1 முதல் என்னென்ன பொருட்களின் விலை உயர்ந்துள்ளது தெரியுமா?

ஏப்ரல் 1-ம் தேதிமுதல்(ஞாயிற்றுக்கிழமை) 2018-19ம் நிதி ஆண்டு் பிறக்கிறது. கடந்த பிப்ரவரி 1-ம் தேதி தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட அனைத்து அறிவிப்புகளும் ஏப்ரல்1-ம் தேதிமுதல் நடைமுறைக்கு வருகின்றன. ஏற்கனவே ஜிஎஸ்டி வரி நடைமுறைக்கு வந்துவிட்டதால், இந்த ஆண்டு பட்ஜெட்டில் அதிகமான அளவு பொருட்களின் விலையில் மாற்றங்கள் செய்யப்படவில்லை. இருப்பினும், குறிப்பிடத்தகுந்த விலை உயர்வும், குறைப்பும் இருக்கிறது. எந்தெந்த பொருட்கள் விலை உயர்கிறது, குறைகிறது என்பதை பார்க்கலாம்.

விலை உயரும் பொருட்கள்

வெளிநாடுகளில் இருந்து முழுஉருவமாக அல்லாமல், உதிரிபாகங்களாக இறுக்குமதி செய்யப்பட்டு இந்தியாவில் பொருத்தி உருவாக்கப்படும் கார், சைக்கிள், மோட்டார்சைக்கிள் ஆகியவற்றுக்கு சுங்கவரி 10 சதவீதம் முதல் 15 சதவீதம் அதிகரிக்கும்.

உதிரிபாகங்களாக இல்லாமல் முழுமையாக வடிவமைக்கப்பட்டவகையில், இறக்குமதி செய்யப்படும் கார்கள், சைக்கிள், மோட்டார் சைக்கிள் ஆகியவற்றுக்கு சுங்கவரி 20சதவீதத்தில் இருந்து 25 சதவீதமாக உயரும்.

டிரக், லாரிகளுக்கான ரேடியல் டயர்களுக்கான வரி 10 சதவீதத்தில் இருந்து 15சதவீதமாகிறது.

இறக்குமதி செய்யப்படும் மொபைல் போன்கள், உதிரிபாகங்களுக்கான சுங்கவரி 20சதவீதமாக உயர்வு.
இறக்குமதி செய்யப்படும் எல்சிடி, எல்இடி, ஓஎல்இடி டிவி பேனல்களுக்கு சுங்க வரி 15 சதவீதமாக அதிகரிப்பு
பெர்பியூம், இறக்குமதி செய்யப்படும் அழகுசாதனப் பொருட்களுக்கு வரி 20 சதவீதம் அதிகரிப்பு
கைக்கடிகாரம், பாக்கெட் கடிகாரம், சன்கிளாஸ், ஆகியவற்றுக்கு 20 சதவீதம் வரி
விலை உயர்ந்த கற்கள், வைரங்களுக்கு வரி 2.5சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக உயர்வு
இறக்குமதி செய்யப்படும் காலனி, பட்டுத்துணிகளுக்கு 20 சதவீதம் வரி
இறக்குமதி செய்யப்படும் கிரான்பெரி பழரசத்துக்கு சுங்கவரி 50 சதவீதமாக உயர்வு
இறக்குமதி செய்யப்படும் ஆரஞ்சு பழரசத்துக்கு வரி 35சதவீதமாக அதிகரிப்பு
பழங்கள், காய்கறிகள் பழரசத்துக்கு வரி 30 சதவீதத்தில் இருந்து 50 சதவீதமாக அதிகரிப்பு
கச்சா காய்கறிகள் எண்ணெய், ஆலிவ் ஆயில், கடலை எண்ணெய் ஆகியவற்றுக்கு வரி 12.5 சதவீதத்தில் இருந்து 30 சதவீதமாக உயர்வு
சுத்திகரிக்கப்பட்ட காய்கறிகள் எண்ணெய், கடலை எண்ணெய் ஆகியவற்றுக்கு சுங்கவரி 20 சதவீதத்தில் இருந்து 35 சதவீதமாக உயர்வு
இறக்குமதி செய்யப்படும் தங்கம், பிளாட்டினம் ஆகியவற்றுக்கு வரி 3 சதவீதமாக உயர்வு

விலைகுறையும் பொருட்கள்

சுத்தம் செய்யப்படாத கச்சா முந்திரிப்பருப்புகளுக்கான இறக்குமதியில் சங்கவரி 5சதவீதத்தில் இருந்து 2.5சதவீதமாக குறைப்பு
சோலார் டெம்ப்பர் கிளாஸ், பேனல், மாடல்கள் ஆகியவை தயாரிப்புக்கு வரிவிலக்கு அளிப்பு.
செவித்திறன் கருவிகள் தயாரிப்பு, உதிரிபாகங்கள் தயாரிப்புக்கு வரிவிலக்கு.

Leave a Reply