shadow

ஏடிஎம் போல எலக்ட்ரானின் ஓட்டு இயந்திரத்தையும் ஹேக் செய்ய முடியும்: ஹர்திக் பட்டேல்

நடந்து முடிந்த குஜராத் தேர்தலில் பதிவான வாக்குகள் என்று எண்ணப்படவுள்ளது. இன்று மாலைக்குள் கிட்டத்தட்ட யார் ஆட்சி அமைப்பது என்று தெரிந்துவிடும் என்பதால் குஜராத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் குஜராத்தில் வாக்கு எண்ணுமிடத்தில் வைக்கப்பட்டுள்ள எலக்ட்ரானிக் ஓட்டு இயந்திரங்களை கம்ப்யூட்டர் மானிட்டர் மூலம் காங்கிரஸ் கட்சியினர் விடிய விடிய கண்காணித்து வருகின்றனர்.

ஏ.டி.எம் இயந்திரத்தை ஹேக் செய்து அதில் முறைகேடு செய்யும்போது எலக்ட்ரானிக் ஓட்டு இயந்திரத்தையும் ஏன் ஹேக் செய்ய முடியாது? பாஜக ஒருசில தொகுதிகள் சுமார் 1200 முதல் 1500 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக் அறிவிக்கப்பட்டால் அந்த தொகுதியில் முறைகேடு நடந்துள்ளதா? என்பது குறித்து ஆய்வு செய்வோம்’ என்று ஹர்திக் பட்டேல் கூறியுள்ளார்.

இன்று வாக்கு எண்ணிக்கை முடிந்தவுடன் பாஜக வெற்றி பெற்றால் ‘ஓட்டு இயந்திரத்தில் முறைகேடு, தோல்வி அடைந்தால் மோடியின் தலைமைக்கு தோல்வி’ என்ற கோஷம் காத்திருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply