shadow

எஸ்.எம்.கிருஷ்ணா மருமகன் வீட்டில் வருமான வரித்துறையினர் திடீர் ரெய்டு

முன்னாள் கர்நாடக முதலமைச்சர் மற்றும் காங்கிரஸ் கட்சியின் முக்கிய பிரமுகராக இருந்த எஸ்.எம்.கிருஷ்ணா, சமீபத்தில் பாஜக தலைவர் அமீத்ஷா முன்னிலையில் அக்கட்சியில் தன்னை இணைத்து கொண்டார். அவருக்கு விரைவில் கவர்னர் பதவி வழங்க வாய்ப்பு இருப்பதாகவும் பாஜக வட்டாரங்கள் தெரிவித்தன

இந்த நிலையில் சற்று முன்னர் எஸ்.எம்.கிருஷ்ணாவின், மருமகன் அலுவலகத்தில் வருமானவரித்துறையினர் சோதனை செய்து வருகின்றனர். இந்த சோதனை பாஜக, மற்றும் காங்கிரஸ் வட்டாரத்தில் ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் அளித்துள்ளது.

இந்த சோதனை குறித்து வருமான வரித்துறையினர் எந்த விளக்கத்தையும் இதுவரை தரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply