எலக்ட்ரிக் வாடகை டாக்சி: உபேர் நிறுவனத்தின் புதிய முயற்சி

காற்று மாசுபாட்டைக் குறைக்க எலெக்ட்ரிக் வாகனங்களை பலதரப்பு மக்களிடம் கொண்டு சேர்க்கும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டு வரும் நிலையில் வாடகை டாக்ஸி, ஆட்டோக்களும் எலெக்ட்ரிக் மயமாக்கப்பட வேண்டும் என்ற முயற்சியை உபேர் நிறுவனம் எடுத்துள்ளது.

இதற்காக பெங்களூருவைச் சேர்ந்த சன் மொபைலிட்டி என்னும் நிறுவனம் உடன் உபேர் கூட்டணி அமைத்துள்ளது. இந்தியாவில் எலெக்ட்ரிக் கார்களை அறிமுகப்படுத்திய முன்னோடிகளாக சன் மொபைலிட்டி நிறுவனம் உள்ளது. இதனது நிறுவனர் சேட்டன் மைனி, உபேர் ஓட்டுநர்களுக்கு சார்ஜ் செய்யக்கூடிய வகையிலான பேட்டரிகளை வழங்க உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசு எலெக்ட்ரிக் வாகனங்களுக்குப் பெரும் மானியங்களையும் சலுகைகளையும் வழங்கத் தயாராக உள்ளது. மேலும், உபேர், ஓலா போன்ற வாடகைக் கார் சேவை நிறுவனங்கள் வருகிற 2026-ம்ன் ஆண்டுக்குள் 40% எலெக்ட்ரிக் வாகனங்களைப் பயன்படுத்த வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது

Leave a Reply