எருமை மாட்டை ரூ.14 கோடிக்கு விற்க மறுத்த மாட்டின் உரிமையாளர்!

ராஜஸ்தானில் எருமை மாட்டை வளர்த்து வரும் ஒருவர் அந்த மாட்டை ரூபாய் 14 கோடிக்கு விலைக்கு கேட்டும் அவர் விற்க மறுத்து உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

ராஜஸ்தானை சேர்ந்த எவ்வாறெல்லாம் ஜாங்க்ரீட் என்பவர் 1300 கிலோ எடைகொண்ட முர்கா என்ற இனத்தைச் சேர்ந்த எருமை மாடு ஒன்றை வளர்த்து வருகிறார். இந்த எருமை மாட்டுக்காக அவர் ஒரு மாதத்திற்கு உணவு செலவாக மட்டும் ரூபாய் ஒன்றரை லட்சம் செலவு செய்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது

பீமா என்று பெயரிட்டுள்ள இந்த எருமை மாட்டுக்கு தினமும் ஒரு கிலோ நெய், அரை கிலோ வெண்ணெய், 200 கிராம் தேன், 25 லிட்டர் பால் மற்றும் ஒரு கிலோ முந்திரி பாதாம் ஆகியவற்றை உணவாக இவர் கொடுத்து வருகிறார்

இந்த எருமை மாடு சமீபத்தில் ராஜஸ்தானில் நடந்த கால்நடை கண்காட்சியில் கலந்து கொண்டது. அப்போது இந்தப் பிரம்மாண்டமான எருமை மாட்டை பார்த்த பலர் இதனை விலைக்கு கேட்டனர். ஒரு கட்டத்தில் இந்த எருமை மாடு 14 கோடி ரூபாய் வரை விலைக்கு போக தயாராக இருந்தது. இருப்பினும் இந்த எருமை மாட்டை தான் விற்க மனம் வரவில்லை என்றும் முர்கா என எருமை மாடுகளை பாதுகாக்க வேண்டும் என்று பொது மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தவே இந்த மாட்டை கண்காட்சி கண்காட்சிக்கு அழைத்து வந்ததாகவும் அவர் தெரிவித்தார்

Leave a Reply